‘மாஸ்டர்! எங்கள் தொழில் வளரவும், நாங்க சூப்பரா செயல்படவும் தொடர்ந்து எங்களுக்கு கோச்சிங்கும் பயிற்சியும் தறீங்க. புது ஃபினான்ஷியல் தொடங்குது. ஏதாவது நல்லதா நாலு சொல்லுங்க மாஸ்டர்!’
‘மாஸ்டர்! எங்கள் தொழில் வளரவும், நாங்க சூப்பரா செயல்படவும் தொடர்ந்து எங்களுக்கு கோச்சிங்கும் பயிற்சியும் தறீங்க. புது ஃபினான்ஷியல் தொடங்குது. ஏதாவது நல்லதா நாலு சொல்லுங்க மாஸ்டர்!’
‘இனி வாடகை வீட்டில் இருப்பதில்லை, சொந்த வீட்டில்தான்!’ - நடுத்தெருவில் நிற்க வைத்து காது கூசும் அளவிற்கான தரங்கெட்ட வார்த்தைகளை எல்லோர் முன்னிலையிலும் சொல்கிறார் வீட்டின் உரிமையாளர்.
கேள்வி: பரமன், உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் யார் என்பதை சொல்லுங்களேன். (பெரிய படிப்பாளியோ, இலக்கிய வாசகனோ இல்லை நான்!) வேறு வேறு வயதில் வேறு வேறு எழுத்தாளர்கள் வசீகரித்திருக்கிறார்கள்.
நடுத்தர வர்க்க மக்கள் பல பேருக்கு இருக்கும் கனவு, நாமும் என்றாவது கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்பது. அந்த கனவு தவறில்லை, அப்படி கனவு கண்ட பல பேர் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்கள்.
152 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு இங்கேயிருக்கும் நமக்கும், செடிக்கும், கொடிக்கும், உயிரினங்களுக்கும் மொத்த பூமிக்கும் ஆற்றலை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறது. அட, ஆமாம் சந்திரனுக்கும் கூட!
‘கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை!’ என்று எழுதிய ஔவை, இன்றிருந்தால், ‘கொடிது கொடிது புற்று கொடிது, அதனினும் கொடிது குழந்தைகளுக்கு புற்று!’ என்று எழுதியிருப்பார். என்ன ஏது என்று தங்களைப் பற்றியோ தனக்கு வந்துள்ள நோய் பற்றியோ விவரம் அறிய முடியா குழந்தைகளுக்கு புற்று வந்துள்ளதை காண்பது கொடுமை.
சூரியன் இறங்கி வந்து காட்டு காட்டென்று காட்டும் காலம் கோடைக் காலம். அதிலும் குறிப்பாய் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் காலம். இந்தக் காலங்களில் தோலுக்கு வரும் ஒரு பிரச்சினை வியர்க்குரு. ஒரு கொப்புளம் போல சிவப்பு சிவப்பாக வந்து அல்லல் தரும். ஏன் வருகிறது இந்த வியர்க்குரு?
“மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ்” களான மாவுச்சத்து (carbohydrates), புரதச்சத்து (protein), கொழுப்புச்சத்து (யீணீt) இவற்றுள் மனிதனுக்கு மிக முக்கியமானது எது என்று கேட்டால், மருத்துவர்கள், உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை நிபுணர்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் வெல்வது “புரதச்சத்து” தான்.
தமிழ் தெரியாத, தமிழ்நாட்டு உணவே பிடிக்காத, பேருந்து பயணத்தில் கூட தமிழ்ப்பாடலை கேட்க சகித்துக்கொள்ள முடியாத, மது, புகை போன்ற பழக்கங்களை வெறுக்கும் கேரள நாட்டு ஜேம்ஸ் தன் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக மனைவி மகன், உற்றார், உறவினர், ஊர்க்காரர்களோடு வாகனம் ஒன்றை அமர்த்திக்கொண்டு கேரளாவிலிருந்து தமிழகத்தின் வேளாங்கண்ணிக்கு வருகிறார்.